உள்ளடக்கத்துக்குச் செல்

வீர் விக்ரம் கிசோர் தேவ வர்மன் மாணிக்கிய பகதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீர் விக்ரம் கிசோர் தேவ வர்மன் மாணிக்கிய பகதூர்
மகாராஜா
Maharaja Bir Bikram Kishore Manikya Debbarma Bahadur
ஆட்சிக்காலம்1923–1947
முன்னையவர்வீரேந்திர கிசோர் மாணிக்கியா
பின்வந்தவர்கிரித் விக்ரம் கிசோர் தேவ வர்மன் தனது தாயான காஞ்சனா பிரபா தேவியுடன் சேர்ந்து ஆட்சி புரிந்தார். (1947 முதல் 1949 வரை)
பிறப்பு(1908-08-19)19 ஆகத்து 1908
இறப்பு17 மே 1947(1947-05-17) (அகவை 38)
துணைவர்காஞ்சன் பிரபா தேவி
குழந்தைகளின்
பெயர்கள்
கிரித் விக்ரம் கிசோர் தேவ வர்ம மாணிக்கியா
அரசமரபுமாணிக்ய வம்சம்
தந்தைவீரேந்திர கிசோர் மாணிக்கியா
தாய்அருந்ததி தேவி
மதம்இந்து சமயம்
தொழில்நிர்வாகி

வீர் விக்ரம் கிசோர் தேவ வர்மன் மாணிக்கிய பகதூர் (Bir Bikram Kishore Debbarma Manikya Bahadur, 19 ஆகத்து 1908 – 17 மே 1947) 20ம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில், திரிபுரா இராச்சியத்தை ஆண்டமாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார்.[1][2][3][4]

இவருக்குப் பிறகு இவரது மகன் கிரித் விக்ரம் கிசோர் தேவ வர்மன், 1949 இல் மாநிலத்தின் திரிபுரா இணைப்பு ஒப்பந்தம் ஏற்படும் வரை இரண்டு ஆண்டுகள் பெயரளவிலான மன்னராக இருந்தார். அப்போது இவருக்கு சிறுவயதாக இருந்ததால் இவரது தாயார் காஞ்சன் பிரவா தேவி தலைமையில் ஆட்சிக் குழு மூலம் நிர்வகிக்கப்பட்டது.[5]

பின்னணி

[தொகு]

இவரது தந்தையான வீரேந்திர கிசோர் மாணிக்கியவிற்குப் பின்னர் 1923ல் இவர் அரசரானார். இந்திய விடுதலைக்குப் பின்னர் திரிபுரா மன்னராட்சிப் பகுதி இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்துகொள்வதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இவர் அரசராக இருந்தார். 1947ல் இவரது இறப்புக்குப் பின்னர் இவரது மகனான கிரிதி விக்ரம் கிசோர் மாணிக்கியா அரச பதவிக்கு உரியவரானார். எனினும் இவர் வயதில் குறைந்தவராக இருந்ததால் இவர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கவில்லை. 1949ல் திரிபுரா இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

தற்காலத் திரிபுராவுக்கான முழுத் திட்டமிடலும் இவர் காலத்திலேயே தொடங்கப்பட்டதால், இவர் திரிபுராவில் நவீன கட்டிடக்கலையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.[6][7] இவர் நிலச் சீர்திருத்தத்தின் முன்னோடிகளுள் ஒருவராகவும் உள்ளார். 1939ல் இவர் உள்ளூர் திரிபுராப் பழங்குடியினருக்காக நிலங்களை ஒதுக்கினார்.[8][9] இது பின்னர் திரிபுரா தன்னாட்சி மாவட்ட அவைகள் அமைப்பதற்கு தூண்டுகோலாக அமைந்தது. திரிபுராவின் முதல் வானூர்தி நிலையமும் இவர் காலத்திலேயே அமைக்கப்பட்டது.

சான்றுகள்

[தொகு]
  1. Deb Barma, Aloy; Debroy, Prajapita (2022). Cinema as Art and Popular Culture in Tripura: An Introduction (in ஆங்கிலம்). Agartala: Tribal Research and Cultural Institute. pp. 12–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-958995-0-0.
  2. "Maharaja Bir Bikram Kishore Manikya Debbarman - the Modern Architect of Tripura". www.oknortheast.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.
  3. "Bīr Bikram Kishore Māṇikya | king of Tripura | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.
  4. Today, North East (2021-08-19). "113th Birth Anniversary Of Maharaja Bir Bikram Kishore Manikya Observed In Tripura". Northeast Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.
  5. "Birthday of Bir Bikram Kishore Manikya Bahadur around the world in 2022". Office Holidays (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.
  6. "Maharaja Bir Bikram Kishore Manikya Debbarman Bahadur- the Modern Architect of Tripura". https://www.oknortheast.com/2011/02/maharaja-bir-bikram-kishore-manikya.html?m=1. 
  7. Debbarma, Khapang (2022-09-22). "Maharaja Bir Bikram's Progressive Ideas Were The Basis Of Modern Tripura". Adivasi Lives Matter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.
  8. "Maharaja Bir Bikram Kishore Manikya Debbarman Bahadur- the Modern Architect of Tripura". https://www.oknortheast.com/2011/02/maharaja-bir-bikram-kishore-manikya.html?m=1. 
  9. "History TTAADC | Tripura Tribal Areas Autonomous District Council". ttaadc.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.